தூதனுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படி OBEY THE VOICE OF THE ANGEL Minneapolis, Minnesota 50-07-13 1. மாலை வணக்கம், கூட்டத்தினரே. நம்முடைய முதலாம் இரவில் ஜெப வரிசையைத் தொடங்குவதற்கும், தேவையுள்ளவர்களுக்கும், வேதனையோடும் துன்பத்தோடும் இருப்பவர்களுக்காக ஜெபிப்பதற்காகவும் இன்றிரவு இங்கே இருப்பது ஒரு சிலாக்கியமாயுள்ளது. இந்த வாரம் முழுவதும் ஒரு மகத்தான ஆசீர்வாதமாக இருக்கும்படியாக அது நிரூபித்துக் காட்டும் என்று நான் தேவனையே நம்பியிருக்கிறேன். உங்களில் அநேகர் தேவையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். நான் உங்களுக்காக ஜெபிக்கும் விதமாக, என்னால் உங்களுக்காக செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்கவே நான் இங்கிருக்கிறேன். தேவனைத் தவிர வேறு யாரும் உங்களைச் சுகமாக்க முடியாது. உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர் அவர் ஒருவர் மாத்திரமே. நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் ஜெபிப்பது தான். அவர் எனக்குக் கொடுத்திருக்கிற இந்த ஊழியத்தினூடாக, அவர் அதை ஆசீர்வதித்திருக்கிறார். என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, நான் தாழ்மையாயிருந்து, ஜனங்களுக்கு ஊழியம் செய்யவே முயற்சித்திருக்கிறேன். 2. இன்றிரவு இங்கே மினியாபோலிஸில் ஜெப வரிசையை துவங்குவதற்கு நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். நான் மற்றவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எல்லாரும் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்பதும், நீங்கள் விசுவாசம் கொண்டிருந்து நான் உங்களுக்குக் கூறுவது சத்தியம் என்று விசுவாசிக்க வேண்டும் என்பதும் என்னுடைய வாஞ்சை. ஏறக்குறைய இங்கே உள்ளேயிருக்கும் உங்கள் எல்லாருக்குமே, ஓ, நான் நினைக்கிறேன், அந்த விதத்தைக் குறித்து மேலாளர் விளக்கிக் கூறியிருக்கிறார், அவர்கள்... அது என்னிடம் வந்து, ஒரு இரவில் அந்த அறைக்குள் நடந்து வந்த ஒரு தூதன் மூலமாக ஊழியம் கொடுக்கப்பட்டது. நான் ஒரு சிறு பையனாக இருந்த போது, அது ஆரம்பித்தது. என்னுடைய ஜீவியத்தினூடாக அது என்னிடம் பேசினது. எனக்கு ஏறக்குறைய ஏழு வயதாக இருக்கும் போது, ஒரு முறை ஒரு புதரிலிருந்து அது வெளியே வந்தது. அந்தப் புதரில் ஒரு சுழல்காற்று வேகமாக சுழன்று கொண்டேயிருந்தது, நான் ஒருபோதும் மது அருந்தவோ, புகைக்கவோ, அல்லது என்னுடைய சரீரத்தை கெடுத்துக் கொள்ளவோ கூடாது என்று அது என்னிடம் கூறினது; நான் செய்வதற்காக அங்கே ஏதோவொன்றிருந்தது. இப்பொழுது, என்னுடைய ஜனங்கள் முன்பு கத்தோலிக்கர்களாக இருந்தனர், அதைக் குறித்து அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை, அவர்கள் அந்தக் காரியங்களை மறைத்து வைத்திருந்தனர். அதற்கும் ஏறக்குறைய நான்கு நாட்கள் கழித்து, அது எனக்குத் தோன்றினது, அது எப்போதுமே செய்கிறபடி, ஒரு வினோதமான உணர்வு என்மேல் வந்தது, ஜெபர்ஸன்வில்லிலுள்ள முனிசிபல் பாலத்தை நான் கண்டேன், அது குறுக்காக இருந்தது, அது நான் நின்று கொண்டிருந்த மலையின் மேலிருந்த அந்த வனாந்தரத்தை விட்டு மேலே எழுந்து வந்து, அந்த ஆற்றின் குறுக்காக அமைந்தது. 16 மனிதர்கள் அதை விட்டு விழுகிறதை நான் கண்டேன். அவர்கள் அதை (பாலத்தைக்) கட்டினார்கள் மேலும் அந்த நாளில் இருந்து 22 வருடங்களில், அந்த முனிசிபல் பாலமானது அதே இடத்தில் நீளமாக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு அதில் 16 மனிதர்கள் தங்கள் ஜீவனை இழந்து போயினர். காரியங்கள் அப்படியே அதைப் போன்றே சம்பவித்தன. நானாகவே செய்ய முடிந்தது எதுவுமே கிடையாது. அது அப்படியே அவர் எனக்குக் காண்பிப்பது தான், என்னால் பேச முடிந்தது எல்லாமே அதைத் தான். எந்த உண்மையான தேவனுடைய மனுஷனும், பேசும்படி தேவன் தன்னுடைய வாயில் வைப்பதை மாத்திரமே அவனால் எப்பொழுதும் பேச முடியும். அதற்கு வெளியே, அது முற்றிலும் தோல்வியடைந்ததாகவே இருக்கும். அநேக நேரங்களில், அது என்னைச் சந்தித்து, அநேக காரியங்களைக் கூறின போது - இந்தக் கூட்டங்களில் ஒன்றில் உங்களிடம் அதைக் கூறும்படியாக எனக்கு அநேகமாக சற்று கழிந்து ஒரு தருணம் கிடைக்கலாம். 3. ஆனால் வெளியே போவதற்கு சற்று முன்பு, சென்ற முறை அது தோன்றினது... நான் எப்போதுமே வேலை செய்தேன். நான் ஜெபர்ஸன்வில்லிலுள்ள அந்தச் சிறு பாப்டிஸ்டு சபையின் மேய்ப்பராக ஆனேன், அது இன்னுமாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது. நான் ஒரு காணிக்கையும் எடுத்ததே கிடையாது. நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் காணிக்கை எடுத்ததே கிடையாது. எனக்கு அதில் நம்பிக்கையில்லை... என்னால் வேலை செய்ய கூடுமானால், நான் ஏன் வேலை செய்ய முடியாது. நான் இந்தியானா மாகாணத்தில் விலங்குகள் வேட்டையாடப் படுவதைக் கண்காணிக்கும் அதிகாரியாக (game warden) இருந்தேன். ஒருநாள் நான் ரோந்திலிருந்து வந்து, அந்த... என்னுடைய இடத்திற்குள் நடந்து சென்றேன், நான் அந்த இரவில் ஏறக்குறைய ஒரு மணிக்கு ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில். அப்போது நான் என்னுடைய அறையில் ஒரு ஒளி தரை முழுவதும் பரவத் தொடங்குவதைக் கவனித்தேன். அது எங்கேயிருந்து வருகிறது என நான் வியந்து கொண்டிருந்தேன். நான் மேலே நோக்கிப் பார்த்தேன், கூட்டத்தில் தோன்றுகிற அந்த அதே ஒளி, அது... ஒருக்கால் அவர்கள் ஏற்கனவே அதைக் குறித்த புகைப்படத்தை உங்களுக்குக் காண்பித்திருக்கலாம். அது கூட்டத்தில் இருந்த போது, புகைப்படக்கருவிகளைக் கொண்டும், மற்றவைகளைக் கொண்டும் இப்பொழுது அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். [சகோதரன் பிரன்ஹாம் இருமுகிறார்.] என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். 4. அது தரை முழுவதும் பரவிக் கொண்டிருந்தது, அது என்னுடைய வலதுக்கு நடந்து வந்து கொண்டிருந்தது. அது எப்போதுமே என்னுடைய வலது பக்கத்திலிருந்து தான் வருகிறது. ஆகையால் தான் நான் அந்தப் பக்கத்திலிருந்து ஜெப வரிசையைத் துவங்குகிறேன். அது எப்போதுமே வலது பக்கத்திலிருந்து தான் வருகிறது. வெளிப்படையாகக் கூறினால், அது சரியாக இப்பொழுதே இங்கேயிருக்கிறது. பிறகு ஒரு... நான் அதைக் கூறிக் கொண்டிருந்த போது, அது அருகில் வருவதை நான்-நான் அறிந்தேன். பிறகு-பிறகு அது என்னை நோக்கி வந்தது, ஒரு மனிதன் நடந்து வருவதை நான் கண்டேன். அவர் வெறுங்காலுடன் இருந்தார். அவர் ஒரு மேலங்கியைப் போன்ற ஒரு வெண் வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருக்கு கறுத்த தலைமயிர் (dark hair) அவருடைய தோள்கள் வரை இருந்தது. அவருக்கு கருமை நிற கண்கள் இருந்தன. அவருடைய முகம் மென்மையாக இருந்தது, அது ஒருவித கருமை நிறமாய் (dark complected) இருந்தது. அவர் என்னண்டையில் நடந்து வந்தார், அவர் தம்முடைய கைகளை இந்தவிதமாக மடக்கி வைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னைக் கீழாக நோக்கிப் பார்த்தார். நான் என்னுடைய விரல்களைக் கடித்துக் கொண்டிருந்தேன், நான் மிகவும் பயந்து போனேன். அவர், 'பயப்படாதே' என்றார். அவர், 'பயப்படாதே' என்று கூறுகையில், அது எப்போதும் என்னிடம் பேசியிருந்த அதே சத்தம் தான் என்று அறிந்து கொண்டேன், ஆனால் நான் அவரைக் கண்டது அதுதான் முதல் தடவை. நான் ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டு என்னிடம் என்ன பேசிக் கொண்டு வந்திருந்தார் என்பதை அறிந்திருந்தேன். அவர், 'நீ தேசங்களிலுள்ள ஜனங்களுக்கு தெய்வீக சுகமளித்தலின் ஒரு வரத்தை எடுத்துச் செல்லும்படி உன்னிடம் கூறும்படியாக, நான் தேவனுடைய சமூகத்தி லிருந்து அனுப்பப்பட்டேன்' என்றார். நான், 'ஐயா, ஜனங்கள் என்னை நம்ப மாட்டார்கள். எனக்கு கல்வியறிவு கிடையாது. என்னால் போக முடியாது' என்றேன். அவர், 'நான் உன்னோடு இருப்பேன்' என்றார். நான், 'அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்' என்றேன். அவர், 'ஜனங்கள் உன்னை நம்பும்படியாக, தீர்க்கதரிசி யாகிய மோசேக்கு கொடுக்கப்பட்டது போல, உனக்கும் இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்படும், முதலாவது, அவர்களுடைய கரத்தைப் பிடிப்பதன் மூலம் அந்த நபருடைய வியாதிகளைக் கண்டறிய உன்னால் முடியும். நீ பயபக்தியாயும் உத்தமமாயும் இருந்தால், அவர்கள் தங்கள் இருதயத்தில் செய்திருக்கிற காரியங்களை நீ அவர்களிடம் கூறுவதையும், அவர்களிடம் இருக்கும் இரகசிய பாவங்களும், வியாதிகளும், மற்றும் ஒவ்வொன்றையும் கூறுவது சம்பவிக்கும். இதன் மூலம் உன்னுடைய கிரியை உண்மை என்று அப்போது அவர்கள் அறிந்து கொள்வார்கள்' என்றார், அவ்வாறு தான் கூறப்பட்டது. 5. ஆனால் ஏறக்குறைய ஒரு வருடமாக, அது அந்தவிதமாகவே தொடர்ந்து சம்பவித்துக் கொண்டிருந்தது; அதன் பிறகு சுமார் இரண்டு வருடங்களாக, அது இருந்தது. பிறகு அந்த வரத்தின் மறு பாகமானது வெளிப்பட்டது, அது சில பத்து, பன்னிரண்டு, ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நான் அவரிடம் கூறினேன்; நான், 'நல்லது, நான் போகிறேன்' என்றேன். அவர், 'நான் உன்னோடு கூட இருப்பேன்' என்று கூறி விட்டு, அந்த அறையை விட்டு வெளியே மறைந்து போனார். பிறகு நான் அதைத் தொடங்கினேன். அக்காரியங்கள் சம்பவித்துக் கொண்டு வருகின்றன. நிச்சயமாகவே, அநேக நேரங்களில், செய்தித்தாள்கள், 'தெய்வீக சுகமளிப்பவர்' என்று கூறலாம். அது அவ்வாறு இல்லை, நண்பர்களே. செய்தித்தாள்களும், ஜனங்களும் அவ்வாறு கூறுகிறார்கள் என்ற காரணத்தினால் என்னால் சுகமாக்க முடியாது. நீங்கள் குற்றமுள்ளவர்களாக இருந்தாலொழிய, யாராவது உங்களைக் குறித்து எதைக் கூறினாலும், சுகமளிக்கக் கூடியவர்கள் யாருமே கிடையாது. ஆனால் நான் என்னைத்தானே ஒரு தெய்வீக சுகமளிப்பவன் என்று அழைத்துக்கொள்கிற குற்றவாளியாக நான் ஒருபோதும் இருந்ததில்லை. நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க மாத்திரமே செய்கிறேன். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தான் சுகமளிப்பவர். சுகமளிக்கிற ஒருவர் அவர் தான். இப்பொழுது, நான் ஜெபிக்க மாத்திரமே செய்கிறேன், அப்போது இந்த அடையாளங்களும் அற்புதங்களும் நடப்பிக்கப்பட்டன. அவைகளைச் செய்வது நானல்ல. அதைச் செய்வது உங்களுடைய இரட்சகர் தான். இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும், பையனும், சிறு பெண் பிள்ளையும் என்ன செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்றால், இந்த அடையாளங்களும் அற்புதங்களும் மனிதனால் செய்யப்படு வதல்ல என்பதை விசுவாசிக்க வேண்டும் என்பது தான். இங்கேயிருக்கும் ஜனங்களாகிய உங்களோடு கூட இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டும்படியாக, அவர் மூலமாகவே அவைகள் செய்யப்பட்டன. உங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யவே அவர் இங்கிருக்கிறார். ஜனங்கள் ஒருவிதத்தில் தேவனிடத்திலுள்ள தங்கள் விசுவாசத்தை இழந்து விடுகை யில், அந்த ஜனங்களுக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்திக் காண்பிக்கும்படி இந்தக் காரியங்களை செய்வதற்காகவே அவர் இறங்கி வருகிறார். 6. நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இது ஒரு உணர்ச்சிகரமான காரியமல்ல. இது பயபக்திக்குரிய காரியமாக உள்ளது, நாம் ஒரு உண்மையான உத்தமத்தோடு கூடிய இருதயத்தோடு தான் தேவனை அணுக வேண்டும். உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பயபக்தியாக இருங்கள். மேலும் கீழ்ப்படியுங்கள் - இப்பொழுது, உங்கள் தலையைத் தாழ்த்த வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கும் போது, நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அது நான் ஜெபித்துக் கொண்டிருக்கும் நேரத்தில். எந்த இடமாக இருந்தாலும், நான் அதற்கு மரியாதை கொடுக்கிறேன். பிறகு நான்... கர்த்தர் ஏதோவொரு அற்புதத்தை நடப்பிக்கிறார் என்றால், அதைக் காண உங்களால் கூடும், நான் உங்களைக் கேட்டுக்கொள்வேன், அதற்குப்பிறகு உங்கள் தலையை உயர்த்தலாம். நீங்கள் கீழ்ப்படிந்து நீங்கள் செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்வது போன்று செய்வீர்களானால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று உங்களைக் குறித்து நிச்சயமுடையவனாய் இருப்பேன். அதன்பிறகு நான்... நான் ஜனங்களாகிய உங்ளுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன், உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கும் உங்களைத் தெரியாது. எனக்குத் தெரிந்தமட்டில், இங்கிருக்கும் என்னுடைய மேலாளரைத் தவிர, இங்கேயுள்ள ஒரு நபரையும் எனக்குத் தெரியாது, அவர் இங்கே மேடையின் மேல் என்னோடு கூட இருக்கிறார் என்பதை அறிவேன். வேறு யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் மற்ற மனிதர்களுடைய சாட்சிகளுக்காக நான் பொறுப்பாளியாய் இருக்க முடியாது. சத்தியம் என்று நான் அறிந்திருப்பவைகளுக்காக மாத்திரமே நான் பொறுப்பாளியாக இருக்க முடியும். அதன்பிறகு ஆராதனைகள் முடியும் போது, இந்த அடுத்த வாரத்தில், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஒரு வாரத்தில், நாங்கள் தங்கியிருக்கும்படி கர்த்தர் அனுமதிப்பாரானால்... நான் சொல்லியிருக்கிற இந்தக் காரியங்கள் வந்து சம்விக்கும், அப்போது நீங்கள் தேவனை விசுவாசியுங்கள். அவைகள் சம்பவிக்காவிட்டால், நான்-நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி. இப்பொழுது, அது எந்த கூட்டத்தினருக்கும் நியாயமான ஒரு காரியம், இல்லையா? நீங்கள் அப்படியே தேவனை அனுமதியுங்கள்... ... அதன்படி நீங்கள் முடிவு செய்யுங்கள். பாரபட்சம் காட்டுவதோ அல்லது... செய்வதற்கு முயற்சிக்க வேண்டாம். அப்படியே பயபக்தியாக இருங்கள், அப்படியே வந்து அமர்ந்து, கிறிஸ்தவ மனிதர்களும் ஸ்திரீகளுமாக நீங்கள் இருக்க வேண்டிய விதத்தில் அதைக் கவனித்துப் பாருங்கள், அதன்பிறகு நீங்கள் உங்கள் அபிப்ராயத்தைக் கூற முடியும். தேவன் நம்மை ஆசீர்வதித்து, அவருடைய பிரசன்னத்தை நமக்குத் தந்தருள வேண்டுமென்று நான் ஜெபிப்பேன். 7. வேதவாசிப்பு இல்லாமல் எந்த ஆராதனையும் முழுமை அடையாது என்று நான் நினைக்கிறேன். அப்படி யானால் இன்றிரவிலும் இது அவ்வாறே இருக்குமானால், நான் தேவனுடைய வார்த்தையில் வெறுமனே ஒரு - ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். என் வார்த்தை தவறிப் போகும், எல்லா சாவுக்குரிய மனிதனின் வார்த்தைகளும் ஒழிந்து போவது போல், என் வார்த்தைகளும் ஒழிந்து போகும், ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போவதில்லை. அது - அது சத்தியமாயுள்ளது. நீங்கள் என்னுடன் யாத்திராகமம் 23வது - 23வது அதிகாரத்திற்குத் திருப்பி, 20ம் வசனம் தொடங்கி தேவனுடைய வார்த்தையில் சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் வேதாகமத்தை திருப்புவதைக் காணும் போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதுவே தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. அப்படியானால், நாம் வார்த்தையி லிருந்து வாசிப்போமானால், தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பார். அது வெறுமையாய் திரும்பாது, ஆனால் அதுவோ, அது என்ன நோக்கத்திற்காக இருந்ததோ அதைச் செய்து முடிக்கும். இப்பொழுது, நீங்கள் என்னுடன் வாசிக்கையில், நானும் வாசிக்கிறேன். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன் சென்று... 8. நாம் சிறிது நேரம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோம். எங்கள் பரலோகப் பிதாவே, இங்கே பூமியில் மீதியாயிருக்கிறவர்கள் மத்தியில் ஜீவிப்பதற்கும், இவர்கள் மத்தியில் இருப்பதற்கும் கிடைத்த சிலாக்கியத்திற்காக நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஓ, நாங்கள் உமக்காக, உம்முடைய குமாரனுக்காக ஒவ்வொரு விநாடியையும் செலவளிக்கவே வாஞ்சிக்கிறோம். மேலும் இப்பொழுது, நாங்கள் இங்கே கிறிஸ்தவ விசுவாசிகளாக கூடி வந்திருக்கையில், இன்றிரவில் எங்களுக்கு ஒத்தாசை செய்யும், கர்த்தாவே, நாங்கள் வினோதமான பார்வையோடு வரவில்லை, ஆனால் தேவையில் இருப்பவர்களுக்காக இரக்கத்தைக் கண்டடையும் பொருட்டாக தேவனுடைய சிங்காசனத்தண்டை அப்படியே தாழ்மையோடு மாத்திரமே நெருங்கி வருகிறோம். மேலும், பிதாவே, நீர் இன்றிரவில் பேசுகையில், அநேக அவிசுவாசிகளும், பாவி களும், பின்மாற்றமடைந்தவர்களும், உம்முடைய மகிமையை நோக்கிப் பார்த்து, அதைக் கண்டு, பின்னர் பீடத்தண்டை தாழ்மையோடும் இனிமையோடும் வந்து, 'இப்பொழுது, இது என்னுடைய இருதயத்தில் செய்து முடிக்கப்பட்டு விட்டது, நான் இப்பொழுது அவரை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறேன். அவர் இன்னும் ஜீவிக்கிறார் என்றும், அவர் தம்முடைய சபையில் தமது ஜனங்கள் மத்தியில் அரசாளுகிறார் என்றும் நான் அறிவேன்' என்று கூற வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இதை உம்முடைய பரிசுத்த குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 9. நாம் சற்று முன்பு வாசித்த இந்த வார்த்தையானது தேவன் மோசேயை அனுப்புவதாகும். மோசே ஒரு வினோதமானதும், அசாதாரணமானதுமான பிறப்பைக் கொண்டிருந்தான். அது தேவனுடைய தீர்க்கதரிசன சக்கரத்தின் சரியான நேரமாக இருந்தது, அப்போது அது முன்னேற்றமடைவதற்கும், அவர் தம்முடைய ஜனங்களை வெளியே அழைத்துச் செல்வதாக ஆபிரகாமிடம் வாக்குத்தத்தம் பண்ணின ஏதோவொன்று சம்பவிப்பதற்கு காரணமாகும் சரியான நேரமாக இருந்தது. அவர் அவ்வாறே செய்தார். தேவன் எப்போதுமே சரியான நேரத்தில் அசைவாடி இயங்குகிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நாமும் அந்த நாளில் தான் இருக்கிறோம்; நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். முடிவு எவ்வளவு சமீபமாயுள்ளது என்பது எனக்குத் தெரியாது: யாருக்குமே தெரியாது, தூதர்களுக்கோ அல்லது தேவனுடைய குமாரனுக்கோ கூடத் தெரியாது; பிதா மாத்திரமே அதை அறிவார். ஆனால் நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், கடைசி நாளில் இந்த அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். ஆகையால் தேவன் மோசே என்ற பெயருடைய ஒரு மனிதனை எழுப்பினார், அவன் அடிமைத் தனத்தில் இருந்த ஜனங்களை விடுவிக்கும்படி, அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக அவன் இந்த உலகத்திற்குள் பிறந்தான், தேவன் அவனைக் கொண்டிருந்தார், அந்த ஜனங்களால் தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய முடியவில்லை... அவர் அவருடைய... வழியாக அவர்களை வெளியே கொண்டு வந்தார். அது மோசே அல்ல, மோசே ஒருக்காலும் ஒரு அற்புதத்தையாகிலும் நடப்பிக்கவில்லை. அது மோசேக்கு முன்பாகப் போன தேவனுடைய தூதனானவராக இருந்தது. அது இரவில் ஒரு அக்கினி ஸ்தம்பமாகவும், பகலில் ஒரு மேகமாகவும் இருந்தது. சீக்கிரத்தில், நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கப் போகும் அந்தப் படத்தை நீங்கள் காணும் போது. நம்மிடம் அது இல்லாமலிருந்தால். இன்று ஜனங்களை வழிநடத்திச் செல்கிற அதே அக்கினி ஸ்தம்பம் தான் தேவனுடைய தூதனானவர் என்று நீங்கள் உணருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மோசேயை வழி நடத்தின தூதனானவர் உடன்படிக்கையின் தூதன் என்பதை நாம் அறிவோம், அவர் தேவகுமாரனாகிய கிறிஸ்து தாம். மேலும் இப்பொழுது... அல்லது, தேவனை விட்டு வெளியே வந்த லோகாஸ் தான் தேவகுமாரனாக இருந்தது. அதன் பிறகு... இஸ்ரவேல் புத்திரர்கள் அடிமைத்தனத்தில் இருந்து, தங்களுக்குத் தாங்களே உதவிசெய்ய முடியாத நிலையில் இருந்த போது, தேவன் அவர்களை விடுவித்தார். இன்று, ஆவிக்குரிய பிரகாரமாக, தேவனுடைய ஜனங்கள் அடிமைத் தனத்தில் இல்லை, அவர்கள் - அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இனி மேலும் எந்த மனிதனும் அடிமைத்தனத்தில் தரித்திருக்க வேண்டியதில்லை, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் அவனைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து (வெளியே) கொண்டு வருகிறார். ஆனால் அவருடைய பிள்ளைகளாயிருக்கிற இந்த ஜனங்கள் வியாதிப்பட்டவர்களாயும் தேவையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் புற்றுநோயினால் பாதிக்கப் பட்டவர்களாகவும், காச நோயினாலும், இருதயக் கோளாறி னாலும் அவதிப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள், இந்த பூமியிலுள்ள நம்முடைய அன்பான மருத்துவர்களால் அதற்கு எந்த தீர்வும் காண முடியவில்லை. அது பெருகிக் கொண்டே வருகிறது, அது எல்லா நேரமும் அதிகரித்துக் கொண்டே, அதிகரித்துக் கொண்டே வருகிறது. வியாதிகள் அதிக அதிகமாய் குவிந்து கொண்டே இருக்கிறது. சில காரியங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதே மருத்துவர்களுக்குத் தெரியவில்லை, தேவன் சபைக்கு அவருடைய வரங்களையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், மீண்டும் திரும்ப அளிக்கும்படியாக, ஜனங்கள் வருடக்கணக்காக உத்தமத்தோடு அவரை நோக்கி கதறியிருக்கிறார்கள். இன்றிரவும் இங்கேயிருக்கிற நூற்றுக்கணக்கானவர்கள் அந்தவிதமான ஜெபத்தை ஏறெடுத்திருக்கிறார்கள் என்று நான் நினைக் கிறேன். நல்லது, தேவனுடைய பிள்ளைகள் எகிப்தில் கூக்குர லிட்டு அழத் தொடங்கின போது, தேவன் அவர்களுக்கு ஒரு விடுவிப்பவனை அனுப்பி, அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் இந்த விடுவிப்பவனை நிரூபித்தார். இன்றிரவும் தேவனால் அதைச் செய்ய முடியும் என்று, அப்படியே அதே காரியத்தைச் செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்க வில்லையா? அவர் இன்றிரவும் அதே பிதாவாக இல்லையா? நீங்கள் வியாதிப்பட்டிருந்து, சுகமாக முடியாமலும், மருத்துவர் உனக்கு உதவி செய்ய முடியாமலும் இருந்தால், உங்களுடைய பிதா இங்கே உங்களுக்காக இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கவில்லையா? அவர் தம்முடைய வரங்களை அனுப்ப முடியாதா? இப்பொழுது, ஆகையால் அவர் - அவர் அதைச் செய்திருக்கிறார், அவர் இன்றும் அப்படியே மாறாதவராக இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் எப்போதுமே ஒரு அருளப்பட்ட வழியை உண்டாக்குகிறார். 10. இப்பொழுது, அநேக ஜனங்கள் அவ்வாறு கூறி யிருக்கிறார்கள், ஏனென்றால் இந்த வரத்தைக் குறித்து நான் சாட்சியாயிருக்கிறேன்... இப்பொழுது, நான் அந்த வரம் அல்லவென்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இங்கே இன்றிரவு செய்யப்படப் போகிறதில் நீங்கள் காண்பவர், அது இப்பொழுது இங்கே காணும்படியாக - காணக்கூடாததாக இருக்கிறது, அவர் தான் அந்த வரமாக இருக்கிறார். அவர் தான் தேவனால் அனுப்பப்பட்டவர். அவர் என் வழியாகப் பேசுகிற போது, நான் அப்படியே பேசுகிறேன். அவர் அதை முதலில் என்னிடம் கூறினாலொழிய என்னால் எதையும் கூற முடியாது. ஆனால் ஜனங்களை விசுவாசிக்கும்படி செய்வதற் காக, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படி; வியாதியஸ்தரைச் சுகமாக்க அல்ல, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாகவே அவர் என்னை அனுப்பியுள்ளார் என்பதை அவர்கள் நம்பச் செய்யும்படி என்னால் இதைச் செய்ய முடியும் என்று அவர் என்னிடம் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். 'விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்.' இப்பொழுது, அவர் தான் அந்த வரமாக இருக்கிறார். கொஞ்ச காலத்திற்கு முன்பு, யாரோ ஒருவர் என்னிடம், 'சகோதரன் பிரன்ஹாமே, தூதர்கள் பழைய ஏற்பாட்டில் தான் பணிவிடை செய்யும் ஆவிகளாய் இருந்தார்கள், ஆனால் பரிசுத்த ஆவியானவர் வந்தது முதற்கொண்டு, அதற்கு மேல் நமக்கு பணிவிடை செய்யும் தூதர்கள் இருக்கவில்லை' என்றார். இப்பொழுது, அன்பு நண்பர்களே, இது தூதர்களை ஆராதிப்பதல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; தூதர்களை ஆராதிப்பதில் நமக்கு நம்பிக்கை கிடையாது. ஆராதிக்கப்பட வேண்டியவர் ஒருவர் மாத்திரமே; அவர் தான் தேவன், அவருடைய குமாரன், நம்முடைய பரிசுத்த ஆவியானவர். எந்த தூதனோ, எதுவுமோ, எந்த மனிதனோ, அல்லது எந்த தூதனும் ஆராதிக்கப்பட வேண்டியவன் அல்ல. மேலும் இப்பொழுது, தேவதூதன்... ஒரு உண்மையான தேவதூதன் ஆராதிக்கப்படும்படி நிற்க மாட்டான். ஆனால் அந்த தூதர்கள் பரிசுத்த ஆவி வந்த பிறகும் இன்னுமாக சபைக்கு ஊழியம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும், எப்படியாக ஏறத்தாழ... 11. நல்லது, மரியாளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஒரு... காபிரியேல் இறங்கி வந்து, இரட்சகரின் கன்னிப் பிறப்பைக் குறித்து அவளிடம் பேசினான், அல்லது ஆலயத்தில் இருந்த சகரியாவிடம் பேசினான். அல்லது, நல்லது, பரிசுத்த ஆவியானவர் வந்த பிறகு. பிலிப்பு பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? நாம் எல்லாருமே அதை விசுவாசிக் கிறோம், இல்லையா? நல்லது, அவன் சமாரியாவில், இருந்து பிரசங்கித்து, ஒரு எழுப்புதலைக் கொண்டிருந்த போது, பரிசுத்த ஆவியானவர் அவனிடம் வந்து, அல்லது கர்த்தருடைய தூதனானவர் அவனைத் தொட்டு, 'நீ காசா வனாந்தரத்திற்குப் போ' என்று கூறினாரா? கர்த்தருடைய தூதனானவர் அவனிடம் வந்தார். அது உண்மையா? அது அவனிடம் வந்த கர்த்தருடைய தூதனாக இருந்தது. நல்லது, மகத்தான அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்று ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறோம். அவன் இராஜ்யத்தின் திறவுகோல் களைக் கொண்டிருந்தான். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான், இல்லையா? ஆனால் அவன் ஒரு இரவு வேளையில் சிறைச்சாலையில், காவற்கூடத்தில் இருந்த போது; யோவான் மாற்குவின் வீட்டில் அவர்கள் ஒரு ஜெபக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது உள்ளே வந்து, அவனைத் தொட்டு, நடத்திச் சென்றது கர்த்தருடைய தூதன் தான்... பரிசுத்த ஆவியானவர் அல்ல, உள்ளே வந்த கர்த்தருடைய தூதன் தான். 12. பவுல் பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்தான் என்பதை நாம் அறிவோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது, அவன் கடலில் 14 நாட்கள் பகலும் இரவும் இருந்த போது, எந்த சந்திரனோ அல்லது நட்சத்திரங்களோ இல்லாமல் அதெல்லாமே இருட்டாயிருந்தது. அவனோ ஜெபம் பண்ணு வதற்காக கீழே நீண்டத் தாழ்வாரத்திற்குப் போனான். பின்பு அவன் திரும்பி வந்து அந்த மனிதர்களிடம் பேசி, 'திடமன தாயிருங்கள்; நான் சேவிக்கிற தேவனுடைய தூதனானவர் கடந்த இரவில் என்னிடம் வந்து, 'பவுலே, பயப்படாதே' என்றார் (அப். 27:22,23,24)' என்று கூறினான். அது சரியா? அது பரிசுத்த ஆவியானவர் அல்ல; தேவனுடைய தூதனானவர் (புரிகிறதா?), அது தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தேவதூதன். அதன் பிறகு வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதின (revelator) யோவான். வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் முழுவதும் எழுதப்பட்ட போது, அவன், 'நான் என்னுடைய தூதனை அனுப்பியிருக்கிறேன்' என்று இயேசு சொன்னதாகக் கூறினான். யோவான் அந்த தூதனை வணங்கும்படி (அவன் பாதத்தில்) விழுந்தான், ஆனால் அந்த தூதன், 'எழுந்திரு. தேவனைத் தொழுது கொள் (வெளி. 22:8,9)' என்றான். பாருங்கள், ஒரு உண்மையான - உண்மையான தேவ தூதன் ஆராதிக்கப்படும்படிக்கு நிற்கவே மாட்டான். அவன் தீர்க்கதரிசிகளோடும், இந்தக் காரியங்களை அறிவிக்க அனுப்பப்பட்டிருக்கிற மனுஷரோடுங் கூட தானும் ஒருவன் என்று அவன் கூறினான். ஆகையால், தேவ தூதர்கள் (angelic beings) பூமிக்கு வந்து, தேவனைக் குறித்து சாட்சி கொடுக்கும்படி ஊழியக்காரர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தானியேல் வழியாகவும், அங்கே முற்காலங்கள் முழுவதும் செய்தது போன்று, அவர்கள் மனிதர்கள் வழியாக கிரியை செய்கின்றனர். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். 13. ஆகையால், நண்பர்களே, நான் உங்களுடைய ஒரு சகோதரனாக இருக்கிறேன், அவ்வளவு தான். ஆனால் தேவனுடைய வரமானது ஒரு தூதனுடைய வடிவில் இறங்கி வந்த தேவனுடைய ஆவியாக உள்ளது. இப்பொழுது, அவருக்கு செட்டைகள் கிடையாது. அவர் ஒரு மனிதனைப் போன்றே காணப்பட்டார். அவர் நடந்த போது [சகோதரன் பிரன்ஹாம் விளக்கிக் காண்பிக்கிறார் - ஆசிரியர்.], இவ்விதமாக அப்படியே, அவர் தரையில் நடந்த போது கேட்ட சத்தத்தைக் கேட்டேன். அவர் எந்த மனிதனையும் போன்று அவ்வளவு சாதாரணமாக நடக்கின்றார், எந்த மனிதனையும் போன்றே பேசுகிறார். நான் உபவாசித்து ஜெபிக்கின்ற போது, அவர் அறையினூடாகவும், வெவ்வேறு இடங்களிலும் அடிக்கடி வருகிறார். இப்பொழுது, நாளை இரவில் ஏறக்குறைய இந்நேரத்தில், அல்லது சிறிது முன்பாக, நான் அநேகமாக என்னுடைய உபவாசத்தை முடித்துக் கொள்வேன். இப்பொழுது, நான் ஜெபித்துக்கொண்டு தான் இருக்கிறேன். இப்பொழுது, நான் எதையும் புசிக்கவில்லை... நான்... அது என்னை விட்டுப் போய் விடுமானால், நான் வெளியே போய் விடுவேன். நான் மற்ற யாரையும் போன்று மீன்பிடிப்பதையும், வேட்டையாடுவதையும், பேசுவதையும் விரும்புகிறேன். ஆனால் அவர் வரும் போது, நான்... அப்போது அது வித்தியாசமாக இருக்கிறது. மேலும் இப்பொழுது, இன்றிரவு ஜனங்களாகிய உங்களுக்கு ஊழியம் செய்யும்படி அவர் இங்கேயிருக்கிறார், நான் அவருடைய பேசும் வாயாக (mouthpiece) மாத்திரமே இருக்கிறேன். ஒவ்வொருவரும் அதைக் குறித்த நிச்சயத்தோடு இருங்கள், தேவனுக்கே ஆராதனை செய்து, அவருக்கு துதியை செலுத்தி, தாழ்மையாய் இருங்கள். இப்பொழுது, இது முதல் நாள் இரவு ஆராதனையாக இருக்கிறது, இது ஒருக்கால், ஜனங்களுக்கு ஊழியம் செய்யப் போகும்படிக்கு அவருடைய பிரசன்னத்தை நாம் அடையக் கூடும் முன்பாக ஆனால் - நெருங்கி வருவதற்கு முன்பாக உள்ள சிறிது நேரமாக இருக்கலாம். 14. அங்கே கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிற அன்பான ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது நான் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரே வழி இது மாத்திரமே என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், எத்தனை பேர் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். எத்தனை பேர் தேவ குமாரனை விசுவாசிக்கிறீர்கள்? எத்தனை பேர் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்கள்? அது அருமையானது. அது நல்லது. ஆனால் இப்பொழுது, நண்பர்களே, நீங்கள் விசுவாசிக்க வேண்டியவைகளை உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், அதுதான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதாகும். நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமானால், நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியான தேவனை விசுவாசிக்க வேண்டும். ஆனால் இந்த வரத்தில் விசுவாசம் வைப்பது இன்னுமாக உங்களுக்கு உதவி செய்யாது. நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறியிருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசித்தாக வேண்டும், அவர்களாக என்னை விசுவாசிக்காதீர்கள், ஆனால் அவர்கள் என்னை இந்த நோக்கத்திற்காகவே அனுப்பியிருக்கிறார்கள் என்று விசுவாசியுங்கள். இப்பொழுது, உங்களால் ஒரு கீர்த்தியுள்ள கிறிஸ்தவனாக இருக்க முடிந்து, நான் உங்களுக்கு சத்தியமாக இருப்பவற்றையே கூறியிருக்கிறேன் என்று விசுவாசிக்கத் தவறி விடக்கூடும், அப்பொழுது, அதிலிருந்து சிறிதளவு நன்மை யையும் நீங்கள் ஒருபோதும் பெற்றுக்கொள்ள உங்களால் முடியாது. இப்பொழுது, நான் அதைச் சொல்ல வேண்டி யிருப்பதற்காக வருந்துகிறேன், ஆனால் அது சத்தியமாயுள்ளது. 15. இயேசு பூமியில் இருந்த போது, அவரைக் கொலை செய்த ஜனங்கள், பிதாவாகிய தேவனை விசுவாசித்து, தேவனைப் பெரிதும் ஆராதித்தவர்களாய் இருந்தனர். அது சரியா? ஆனால் அவரால் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. அது சரியா? அவர் தம்முடைய சொந்த வாயி னாலே, 'நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பது போன்று, என்னிடத்திலும் கூட விசுவாசம் கொண்டிருங்கள்' என்றார். அது சரியா? இப்பொழுது, நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருந்தால், உங்களுக்காக ஜெபிக்கும்படி அவர் என்னை இங்கே அனுப்பியுள்ளார் என்று நீங்கள் விசுவாசிக்கும்படி நான் விரும்புகிறேன், அவர் என்னை அனுப்பியுள்ளாரா இல்லையா என்று அவரே நிரூபிப்பார். அவர் அதை நிரூபித்தால், அப்போது நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள். அதுதான் கூட்டத்தை அது இருக்கும் வகையில் ஆக்குகிறது. விசுவாசிக்கும் ஜனங்களுக்காகவே, அவர்கள் ஒரே இருதயத்தோடும் ஒரே இசைவோடும் விசுவாசிப்பார்களானால், நீங்கள் தேவனுடைய மகிமையானது அவருடைய ஜனங்கள் மத்தியில் வெளிப்படுவதைக் காண்பீர்கள். அது உண்மை என்று நான் உங்களுக்கு நிரூபித்திருக்கிறேன். இப்பொழுது, இது நம்முடைய பிதாவிடம் பேசி சம்பாஷிக்கும் வேளை. நீங்கள் விரும்பினால், நாம் ஜெப வரிசையை அமைப்பதற்கு முன்பாக மீண்டும் அவரிடம் பேசுவோமாக. 16. இப்பொழுது, அன்புள்ள பரலோகப் பிதாவே, உம்முடைய வார்த்தை இதோ இந்த பிரசங்க பீடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது, அது சத்தியமான தெய்வீக வார்த்தை என்பது எனக்குத் தெரியும், ஒவ்வொரு வார்த்தையும் சத்தியாயுள்ளது. நான் அதை விசுவாசிக்கிறேன், பழங்காலங் களில் புறப்பட்டுச் சென்ற ஒவ்வொரு தீர்க்கதரிசிக்கும், ஜனங்கள் யேகோவாவை அடையாளம் கண்டுகொள்ளும் படிக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் படியான ஒரு நேரம் அவர்களுக்கு உண்டாயிருந்தது என்பதை உணருகிறேன். இரத்தத்தைக் கொண்டு வழிவகுத் திருக்கிற அப்போஸ்தலர்களும் எங்களுக்கு முன்பாகப் போயிருக்கிறார்கள். அவர்கள் பட்டணங்களில் நிராகரிக்கப்பட்டு, புறம்பே தள்ளப்பட்டார்கள். உம்முடைய சொந்த நேச குமாரனே, அவர் இங்கே பூமியில் இருந்த போது, அவர் அந்தப் பட்டணத்திற்கும் அநேக இடங்களுக்கும் போன போது, அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 'அவர்க ளுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அநேக அற்புதங்களைச் செய்ய முடியவில்லை.' இப்பொழுது, அவர் இன்றிரவு இங்கே எங்களோடு கூட இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். அவருடைய பிரசன்னமானது தம்முடைய சபையில் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டும்படியாக அவர் தமது ஆவியானவரை அனுப்பியிருக்கிறார். பிதாவே, இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும், இங்கே நின்று கொண்டிருக்கிற உம்முடைய பரிதாபத்திற்குரிய, தாழ்மையான, தகுதியற்ற ஊழியக்காரன் தான் இந்த வாக்குமூலங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். என்னுடைய ஜீவியம் முழுவதும் என்னை வழிநடத்தி வந்த தேவனுடைய தூதனானவருக்கு நீர் உத்தரவு கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன், அவர் என்னை பேணி பாதுகாத்து, என்னைப் போஷித்து, இது வரையிலும் என்னைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் இங்கே இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், அவருடைய பிரசன்னத்தின் மூலமாக பரிபூரணமாக விடுவிக்கப்படாமல் ஒரு வியாதியோ அல்லது ஒரு காரியமோ கடந்து போகவே முடியாது. கர்த்தாவே, கூட்டத் தினரில் இருக்கும் அவர்களில் அநேகம் பேர் இப்பொழுது உட்கார்ந்து கொண்டு, 'நான் கற்றுக் கொள்ளப் போகிறேன்... கர்த்தாவே, நான் உம்மைக் குறித்து சிந்தித்துப்பார்க்கப் போகிறேன், உமது ஆவி இங்கே இருக்கிறது. நான் உமது சுபாவத்தை அறிய விரும்புகிறேன், உம்மை நேசிப்பது எப்படி என்றும், உம்மை எங்ஙனம் சேவிப்பது என்றும் நான் அறிய வேண்டும்' என்று கூறுவார்களாக. பிதாவே, இன்றிரவு இங்கேயிருக்கும் எல்லாரையும் ஆசீர்வதியும். வியாதியோடும் துன்பத்தோடும் இருக்கிற யாவரும் சுகமடைவார்களாக, இரட்சிக்கப்படாத எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களாக. உமது பரிசுத்த குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். எனது சகோதரனே, நான் அவனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன? நீங்கள் எத்தனை ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறீர்கள்? நீங்கள் எங்கிருந்து துவங்குகிறீர்கள்? A-1. ஜெப அட்டைகளை விநியோகிப்பது எங்களுடைய வழக்கம், நாங்கள்--நாங்கள் ஏறக்குறைய உலகத்திலுள்ள எல்லாவற்றையுமே முயற்சித்துப் பார்த்து விட்டோம். 17. நாங்கள் வழக்கமாக அட்டைகளை ஊழியக்காரர் களுக்கு அனுப்புவோம். ஊழியக்காரர்களே அந்த அட்டைகளை விநியோகிக்கட்டும் என்று நாங்கள் அந்த அட்டையைக் கொடுத்தோம். முதலாவது ஊழியக்காரர் தம்முடைய குழுவை கொண்டிருப்பார்; அப்பொழுது ஜெபிக்கப்படுவதற்காக இருப்பவர்கள் எல்லாருமே ஏறக்குறைய அவருடைய குழுவினராகத்தான் இருப்பார்கள். அப்போது மற்ற ஊழியக்காரர்கள் அதைக் குறித்து கஷ்டமாக உணர்ந்தார்கள். அதன்பிறகு நாங்கள் கூட்டத்திற்கு வந்தோம்; நான் அவைகளை என்னுடைய மேலாளர்களில் சிலரிடம் கொடுத்தேன். அவர்கள் ஊழியக்காரர்களாக இருந்தார்கள், அவர்களுடைய ஊழியக்கார நண்பர்கள், 'நீங்கள் இன்னார் இன்னாருக்காக என்னிடம் ஒரு அட்டை கொடுக்க மாட்டீர்களா?' என்று கூறுவார். அது அதை மோசமாக ஆக்கியது. நாங்கள் அதை நிறுத்த வேண்டியிருந்தது. அதன்பிறகு, வெற்றிகரமாக செய்யப்பட்டதாக எப்பொழு தாவது நாங்கள் கண்டுகொண்ட ஒரே வழி என்னவென்றால், நான் எனது சகோதரனிடம் அதைக் கொண்டு வந்தேன், அவனே அந்த அட்டைகளை விநியோகிக்கட்டும். அவன் ஒரு ஊழியக்காரன் அல்ல, அவனுக்கு யாரையும் தெரியாது, எனவே அவன் அப்படியே அந்த அட்டைகளை விநியோகிக்கிறான். அவன் மிகவும் நன்கு அறிந்த யாரையாவது பெற்றுக்கொள்ளும் போது, அவைகளை விநியோகிக்க நான் வேறு யாரோ ஒருவரைப் பெற்றுக் கொள்வேன். அப்போது அவைகளை விநியோகிக்க யாராவது ஒருவரைப் பெற்றுக் கொள்ள வேண்டும், எனவே நீங்கள்... அங்கே முகதாட்சணி யம் எதுவும் கிடையாது: யார் வந்தாலும், ஒரு அட்டையைக் கொண்டிருக்க முடியும். 18. நாம் ஆயிரம் அட்டைகளை உங்களுக்குக் கொடுத்திருக்க முடியும், ஆனால் ஒரே இரவில் அநேகருக்கு நம்மால் ஊழியம் செய்ய முடியாது, ஆகவே தான் நாம் வெறுமனே சுமார் 50 அட்டைகளைக் கொடுக்கிறோம். அப்படியானால் அவர்கள் அவ்விதமாய் பெற்றிருக்கிறார்கள், அந்த ஐம்பது அட்டைகளும் கொடுக்கப்படும் போது, முதலாவது இருக்கப் போகிறவர்கள் யார்? எனவே நாங்கள் அப்போது என்னவிதமாய் செய்தோம் என்றால், அவர்கள் வந்து அந்த அட்டைகளை ஒன்றாகக் கலந்து, அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து, அவைகளை விநியோ கிக்கிறார்கள், அதன்பிறகு நாங்கள் மேடைக்கு வந்த பிறகு, அதைத் துவங்கும்படியாக ஒரு எண்ணை நீங்கள் தெரிந்து கொள்ளுகிறீர்கள். யாரோ ஒருவரிடம் எண் 1 இருக்க, நாம் 15லிருந்து துவங்கலாம். நாம் 50லிருந்து துவங்கி, பின்னோக்கி வரலாம். எனவே அங்கே வழக்கமாக சில சிறு பையன்களையோ அல்லது ஏதோவொன்றையோ... அல்லது ஒரு எண்ணை எண்ணும்படி யாராவது ஒருவரை நாங்கள் கொண்டிருக்கிறோம், மேலும், அல்லது... எதிலிருந்து துவங்க வேண்டும் என்று யாரோ ஒருவர் எங்களிடம் இருப்பார் அல்லது வழக்கமாக அவர்கள் அப்படியே என்னிடம் கூற நான் ஒரு எண்ணை எடுத்துக் கொள்கிறேன். ஒருக்கால் சிலசமயங்களில், இந்த வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும், இந்த வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் நான் எண்ணி, பிறகு அவைகளைப் பிரித்து, அவைகளிலிருந்து துவங்கும்படியாக ஒரு எண்ணைப் பெற்றுக்கொள்கிறேன், அல்லது அதைப்போன்று ஏதோவொன்றைச் செய்கிறேன். அல்லது கட்டிலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எண்ணி, பிறகு சக்கர நாற்காலிகளிலோ அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அதை வகுத்து, சில எண்களிலிருந்து துவங்குகிறேன்: வேறு ஏதோவொரு எண்ணிலிருந்து துவங்குகிறேன், எனவே எல்லாருக்கும் நியாயமான விதமாக அது இருக்கும். அது எல்லாருக் கும் நியாயமான விதமாக இருக்கும் என்று நானே அறிந் திருக்கிறேன். அது ...க்கும்படி எல்லாருக்கும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. இப்பொழுது, ஜெப அட்டை உங்களைச் சுகப்படுத்துவதில்லை. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் அன்பான ஜனங்களே, நீங்கள் அப்படியே இந்த விதமாக நோக்கிப் பார்த்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், பரிசுத்த ஆவியானவர் சரியாக மறுபக்கம் திரும்பி, உங்களை அழைத்து, உங்களோடுள்ள காரியம் என்னவென்று உங்களிடம் கூறி, சரியாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களைச் சுகப்படுத்துவார். நண்பரே, இப்பொழுது, அதுதான் உண்மையாக உள்ளது. நீங்கள் அதைக் காண்பீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 19. இப்பொழுது, நீங்கள் A-1 என்றா கூறினீர்கள், நாம் A-1லிருந்து துவங்கலாமா? அவர்களிடம் 1 முதல் 50 வரை உள்ளன. நல்லது, இது நம்முடைய முதலாவது இரவாக இருக்கிறது, நாம் அப்படியே இன்றிரவு 1 லிருந்து துவங்கலாம், அதிலிருந்து ஆரம்பிக்கலாம். A-1லிருந்து ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள்... ஒரே நேரத்தில் மிக அதிகமானோர் நின்று கொண்டிருக்க வேண்டாம். நாம் துவங்கு வோம், A-1 முதல் A- வரை, ஏறக்குறைய 8 அல்லது 10 பேர், அல்லது A-1 தொடங்கி A-15 வரையில். A-1 முதல் A-15 வரையில் எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் மற்றவர்கள், 'நம்பிடுவாய் (Only Believe)' பாடலைப் பாடிக்கொண்டிருக்கையில் அவர்கள் இங்கே வரிசையில் வரட்டும். நான் சற்று நேரம் ஜெபிக்கப் போகிறேன். சபையோரே, உங்களுக்கு விருப்பமானால், நீங்களும் என்னோடு கூட ஜெபித்துக் கொண்டிருங்கள், நானும் உங்களோடு ஜெபிப்பேன். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. [தனிப்பட்ட முறையில் ஜெபம் செய்யும்படியாக சகோதரன் பிரன்ஹாம் விலகிச் செல்கிறார்.] [ஒரு சகோதரன், 'A-1 முதல் A-15 வரையிலான ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள் வரிசையில் நில்லுங்கள், உங்களுடைய ஜெப அட்டை எண்ணின்படி, என்னுடைய வலது பக்கத்திலும், மேடை உங்களுடைய இடதுபக்கமாகவும் இருக்க வரிசையில் நில்லுங்கள். தயவுசெய்து, மற்ற அனைவரும் உட்கார்ந்தவண்ணமாக இருங்கள்' என்கிறார்] [ஒரு சகோதரன், 'நம்பிடுவாய்' என்று அநேக முறை பாடியபடியே கூட்டத்தினரை வழிநடத்துகிறார்.] [ஒரு சகோதரன் ஜனங்களை விசுவாசிக்கும்படி அறிவுறுத்துகிறார். சபையார் இன்னும் சில தடவைகள், 'நம்பிடுவாய்' பாடலைப் பாடுகிறார்கள்.] [சகோதரன் பிரன்ஹாம் ஜெபிக்கையில், ஒரு சகோதரன் ஆராதனையை நடத்துகிறார்.] நீங்கள் விரும்பினால், மறுபடியுமாக, ஆர்கன் இசைக் கருவியைக் கொண்டு மெதுவாக இசைத்துக்கொண்டிருங்கள். அது அருமையாக உள்ளது...?... நண்பர்களே, நாம் இன்னும் ஒருவிசை ஜெபிக்க முடியுமா. நான்... அப்படியே நீங்கள் உங்களுடைய தலைகளைத் தாழ்த்துவீர்களானால். 20. பிதாவே, நீர் இப்பொழுது சற்றே அருகில் வருவீரா, அப்பொழுது தான் உமது மகத்தான பிரசன்னத்தை நாங்கள் உணருவோம்...?... கூட்டத்தினர் இருக்கும் எல்லாவிடங்களிலும் நெருங்கி வருவீரா. இந்தக் கூட்டத்தில் நான் கொடுத்திருக்கிற ஒரு பெரிய வாக்குமூலம் உண்டு. நீர் இல்லாமல், நான் முழுவதும் தோல்வியடைந்தவனாகவே இருப்பேன் என்பதை நான் அறிவேன். இதை என்னால் நானாகவே செய்ய முடியாது, கர்த்தாவே. நான் உம்மைக் கொண்டிருந்தாக வேண்டும். இப்பொழுது நீர் அவரை அனுப்புவீரா? இந்த பரிதாபமான ஜனங்களுக்கு அவர் தான் உதவி செய்ய முடியும். கர்த்தாவே, இன்றிரவு அவர்களைக் கண்ணோக்கிப் பாரும். அவர்கள் மேல் இரக்கமாயிரும். விசுவாசிக்கும் படியாக அவர்களுக்கு மகத்தான விசுவாசத்தைக் கொடுத்தளும், உம்முடைய தெய்வீக சித்தத்தை அறிந்து கொள்ளட்டும்...?... இப்பொழுது எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும். இன்றிரவு பிசாசினுடைய ஒவ்வொரு வல்லமையும் உமது ஆவிக்குக் கீழ்ப்படிவதாக. இந்தப்போராட்டத்தில், எங்களுக்கு விசுவாசத்தைத் தந்தருளும், இந்த சத்துருவுக்கு சவால் விடும்படியான அதிகாரம் செலுத்துகிற விசுவாசத்தை எங்களுக்குக் கொடுத்தருளும். இப்பொழுது, கர்த்தாவே, இந்த ஜனங்களோடுள்ள காரியம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உமக்கு அது தெரியும். கர்த்தாவே, அதை அறியும்படிக்கு நீர் எனக்கு உதவி செய்தருளும், அப்படியானால் உம்மை நேசிக்கும்படியாகவும், உம்மைக் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளும்படியாகவும் அவர்களுடைய விசுவாசத்தை அது கட்டியெழுப்பும். இந்த சத்துருவுக்கு சவால் விடும்படிக்கு நான் இப்பொழுது முன்னேறிப் போகையில், கர்த்தாவே, நீர் என்னோடு கூட வந்து, எனக்கு உதவி செய்வீரா? உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென். ஒவ்வொருவரும் உங்களால் கூடுமான மட்டும் பயபக்தி யாயிருங்கள். எல்லாருமே ஜெபித்துக் கொண்டிருங்கள். சரி இப்பொழுது, ஹவார்டு, அப்படியே ஒரு நேரத்தில் ஒருவராக நீ அவர்களை என்னிடம் அழைத்து வர நான் விரும்புகிறேன். சரி, அவர்களை என்னிடம் அழைத்துக்கொண்டு வா. அபிஷேகமானது சற்று கூடுதலாக ஆகி, அவர்கள் வரத் துவங்கும் போது, ஜனங்களுடைய முகபாவம் எப்படியிருக்கிறது என்று சற்று நேரம் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர்கள் இங்கே அருகில் வரும்போது, வழக்கமாக அவர்கள் அழத் தொடங்கி விடுகிறார்கள் அல்லது ஏதோவொன்று முகபாவத்தை மாற்றி விடுகிறது. இப்பொழுது, இங்கே இந்த மேடையில் அவருடைய பிரசன்னம் இருக்கிறது, சரியாக இப்பொழுதே இருக்கிறது. அது சரியே. 21. நீங்கள் எப்படியிருக்கிறீர்கள், ஐயா? நீங்கள் இங்கே இந்தப் பட்டணத்திலிருந்தா வருகிறீர்கள்? அந்த சகோதரன், இல்லை, நான் சையானிலிருந்து (Zion) வருகிறேன் என்று கூறுகிறார். நீங்கள் சையானிலிருந்து வருகிறீர்கள், அது ஒரு பெரிய பட்டணம். நீர் எனக்கு அந்நியராயிருக்கிறீர். எனக்கு உம்மைத் தெரியாது. ஒருக்கால் நான் உம்மைக் கண்டதேயில்லை. நீர் சையானிலிருந்து வருகிறீர். நான் ஒருக்கால் உம்மைக் கண்டிருக்கலாம், ஆனால் உம்மை எனக்குத் தெரியாது. இப்பொழுது, நீர் ஏதோவொரு இடத்தில் இருக்கிற சில காரணங்களினால் அவதிப்பட்டு வருகிறீர். என்னால் இங்கே உமது கரத்தைப் பிடித்துக்கொள்ள முடியுமானால், ஒருக்கால் நான் உம்மைக் குறித்துக் கூற என்னால் முடியும்...?... ஆமாம், எனது சகோதரனே, நீர் ஒரு நோயாளி. உமக்கு அநேக கோளாறுகள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று இருயதக்கோளாறு, சிலசமயங்களில் அது உம்மைத் தொல்லைப்படுத்தி வருகிறது. உமக்கு வயிற்றுக் கோளாறும் கூட இருக்கிறது. அது சரி அல்லவா? இதைக் குறித்தும் கூட நீர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிருக்கிறீர், அவர்கள் உமக்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. ஆனால் அது...?... நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? கவனியுங்கள், நான் உம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது, நீர் என்னை நோக்கிப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உமது முழு தொல்லையும் என்னவென்றால், நீராக உண்டாக்கிக் கொண்டது தான். நீர் ஒருவிதத்தில் அதிகமாக ஆழ்ந்து யோசித்துக் கொண்டேயிருப்பவர். துவக்க முதலே உமக்கு நரம்புத் தளர்ச்சியிருக்கிறது, அது ஒரு உள்ளான நரம்புத்தளர்ச்சியாகும், அது நரம்புத்தளர்ச்சியில் ஒரு வகையாக இருக்கிறது...?... அது தான் உமக்கு தொல்லை ஏற்படக் காரணம். உண்மையில், உமது இருதயக் கோளாறு பதட்டமான ஒரு இருதயமாக உள்ளது, அது அவ்வித மாகத்தான் இருக்கிறது. நீர் அதைச் சொன்னீர் என்று நான் நம்புகிறேன். மேலும் உமது வயிறு... அப்படியிருக்க காரணமாகியது. உமது வயிற்றில் வயிற்றுப்புண் உள்ளது, அதுதான் உமக்கிருக்கும் இந்தக் கோளாறுக்குக் காரணம், அது மன அழுத்தமாக உள்ளது. சிலசமயங்களில், படுத்திருக்கும் போது, உமது வயிற்றுப்புண் மோசமாக இருப்பதைக் காட்டிலும் உமது இருதயம் தான் மிக மோசமாக உம்மைத் வேதனைப்படுத்துகிறது. இப்பொழுது வழக்கமாக, இந்த வியாதியைக் குறித்த விஷயத்தில், அது தானாகவே படபடக்க காரணமாகி விடுகிறது, அது இருதயம் படபடத்து, அதிர்ச்சியினால் திடீரென துள்ளும்படி ஆக்கி விடுகிறது. 22. ஆனால் இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் சுகமடையலாம். நான் உம்மிடம் சொன்னவை உண்மை தானா? அப்படியானால், நான் அதை அறிந்து கொள்ளும் படியாக ஏதோவொரு வழி இருக்கிறது, இல்லையா, ஐயா? அதைச் செய்து கொண்டிருப்பது தேவனுடைய ஆவி என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் ஒரு வினோதமான உணர்வைக் கொண்டிருந்து, நீர் அருகில் நின்று கொண்டிருக்கிறீர் என்பதை அறிந்து கொள்கிறீர். அங்கே இயற்கைக்கு மேம்பட்ட ஒரு ஜீவன் இருக்கிறது. இப்பொழுது, விசுவாசி யுங்கள். அவருடைய பிரசன்னத்தின் நிமித்தமாக, உமக்கு பயபக்திபூர்வமான பயம் போன்று ஒருவித உணர்வு ஏற்படுகிறது...?... அது தேவனுடைய பிரசன்னம். இப்பொழுது, நீர் இயேசு கிறிஸ்துவிடம் வந்திருக்கிறீர். உமது விசுவாசம் இங்கே அவைகளைச் சந்தித்திருக்கிறது. நீர் உமது தலையைத் தாழ்த்தும். கூட்டத்தினரும் கூட தங்கள் தலைகளைத் தாழ்த்தட்டும். எங்களுடைய பரலோகப் பிதாவே, நீர் இங்கே உள்ளே இருக்கிறீர்... (ஒலிநாடாவில் காலியிடம்) மிகுந்த இரக்கத்திற்காக உம்மிடம் வரும்படியாக. இப்பொழுது இவர் இங்கே மேடையில் இருக்கிறார். அன்புள்ள தேவனே, அவருக்காக விசுவாசத்தைக் கொண்டிருக்கும்படி, எனக்கு உதவி செய்யும். இந்த மனிதனைக் கட்டிவைத்து, இந்தத் தொல்லைக்குக் காரணமான பிசாசே, தேவனுடைய குமாரனாலே நீ இம்மனிதனை விட்டு விலகி, அவனை விட்டு வெளியே போக நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் (adjure). இப்பொழுது, சற்று நேரம் பொறுங்கள். எல்லாரும் தொடர்ந்து உங்கள் தலையைத் தாழ்த்தியபடியே இருங்கள். அது இன்னும் என்னுடைய கரத்தை தட்டிக்கொண்டேயிருக்கிறது. ஐயா, அங்கே அந்த நிறத்தைப் பாருங்கள், அது என்னுடைய கரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது...?... 23. இப்பொழுது, இந்தவிதமாகப் பாருங்கள், ஐயா. நீர் வியாதிப்பட்டுள்ள மனிதன். நீர் ஒரு கிறிஸ்தவர். ஆனால் நீர் இதற்கு முன்பே ஜெபிக்கப்பட்டுள்ளீர், இதற்கு முன்பு எங்கோ ஓரிடத்தில் நீர் ஜெபிக்கப்படுவதற்காக ஒரு ஜெப வரிசையில் இருந்திருக்கிறீர். அது ஒரு - அது ஒருவிதமாக... நீர் அப்படியே ஒருவிதமாக அதைக் குறித்து யூகித்துக் கொண்டிருப்பது போன்று இருக்கிறீர் என்பது உமக்குத் தெரியும். இப்பொழுது, நீர் ஒரு மிகவும் உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. புரிகிறதா? நீர்...?... (செய்ய) வேண்டுமென்று நான்-நான் விரும்பவில்லை. என்னால் அதை உம்மிடம் கூற முடியாது. இப்பொழுது, நான் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன் என்பதை நான் அறிந்திராவிட்டால், நான் உம்மிடம் அதைக் கூறியிருக்க மாட்டேன். நான் அதை உம்மிடம் நன்கு கூற முடியும்படி இருக்க விரும்புகிறேன். தேவன் அதைக் கீழே கொண்டு வந்து, உம்மைக் குணமாக்கும் போது, என்னால் அதை மாத்திரமே செய்ய முடியும். இப்பொழுது, நீர் அப்படியே, சரியாக இப்பொழுதே, எல்லா நேரத்திற்குமான கேள்வியைத் தீர்த்து விட்டதா? நீர் சரியாக இப்பொழுதே அதை விசுவாசிக்கப் போகிறீரா? தேவன் சத்தியத்தைக் கொடுத்திருக்கையில், நான் அந்த சத்தியத்தையே உம்மிடம் கூறியிருக்கிறேன் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர்... பிதாவே, என்னுடைய சகோதரன் மேல் இரக்கமாயிரும். அவர் மீண்டுமாக சாப்பிட்டு, நலமாக உணர விரும்புகிறார், அவரால் நடக்க இயலும்படி இருந்து, இந்த உணர்ச்சிகளைக் கொண்டிருக்காமல் இருக்கவே அவர் விரும்புகிறார். மேலும் கர்த்தாவே, அவருக்கு உதவி செய்யக் கூடிய ஒரே ஒருவர் நீர் மாத்திரமே. எனவே, தேவனே, அது என்னுடைய விசுவாசமாக இருக்குமானால், நாங்கள்- -என்னை மன்னிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அது அவருடைய விசுவாசமாக இருந்தால், கர்த்தாவே, விசுவாசிக் கும்படியான உயர்ந்த நிலைக்கு இப்பொழுதே அவரைக் கொண்டு வாரும். வெளித்தோற்றத்தில், அவருடைய விசுவாச மானது தடுத்து நிறுத்தும்படியாக இல்லை, அவர் விசுவாசிக் கிறார், அப்படியானால் இம்மனிதரைக் கட்டியிருக்கிற இந்த சத்துருவின் மேலாக விசுவாசத்தைக் கொண்டிருக்கும்படி எனக்கு உதவி செய்யும். பிசாசே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த மனிதரை விட்டு வெளியே வா. 24. சரி, நண்பரே, நீர் உம்முடைய தலையை உயர்த்தலாம். இந்த மனிதர் சுகமடைந்து விட்டார்...?... அது உம்மை விட்டுப் போன போது, நீர் நிச்சயமாகவே அதை உணர்ந்தீர். ஓ, என்னே! வீட்டிற்குச் சென்று, உமக்கு என்ன விருப்பமோ அதைப் புசியும். 25. [ஒரு சகோதரன், 'சகோதரன் பிரன்ஹாம் இந்த வியாதியையும், துன்பத்தையும் முற்றிலுமாக தேவனுடைய ஆவியினாலே தான் பகுத்தறிந்தார் என்பது இப்பொழுது உமக்குப் புரிகிறது. அவர் அந்த அட்டையை பார்க்கவே யில்லை. இப்பொழுது, அந்த அட்டையில், 'இருதயக் கோளாறும் வயிற்றுக்கோளாறும்' என்ற வார்த்தைகள் தான் உள்ளன' என்று கூறுகிறார்.] எங்கள் சகோதரனே, அவர் அதை உணர்ந்தார். அவர் அப்படியே... அது--அது அவரை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது, அந்த மனிதர் இப்பொழுதே எந்த வேதனையும் இல்லாமல் வெளியே போய், தமக்கு விருப்பமான எதையும் சாப்பிடலாம். அவர்-அவர் அதைக் குறித்து சாட்சிகொடுத்துக் கொண்டிருப்பார். அவர் சுகமாயிருக்கிறார். அவர் சுகமாயிருப்பார். 26. சரி, ஐயா, முன்னே வாருங்கள். ஒவ்வொவரும் மிகவும் பயபக்தியாயிருங்கள், உங்களால் கூடுமான மட்டும் பயபக்தியாயிருங்கள். அந்த ஒரு மனிதன் சுகமடைந்தது முதற்கொண்டு, ஜனங்கள் விசுவாசிக்க துவங்குகையில், இப்பொழுது ஒரு துடிப்பு உள்ளே வந்து கொண்டிருப்பதைப் போன்று உணருகிறேன். அது அங்கே வெளியிலிருந்து, அப்படியே-அப்படியே அசைந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் கூற முடியும். மாலை வணக்கம், ஐயா. இப்பொழுது, நீர் சரியாக என்னைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உமது மனதிலுள்ளவைகளை வாசிப்பதல்ல...?... அது அப்படியே அந்த... இப்பொழுது, நீர் ஒரு மனிதன், உமக்கு ஒரு ஆவி உண்டு. இந்த அபிஷேகமானது வேறொரு ஆவியைக் கொண்டு உம்மைத் தொடர்பு கொள்ளுவதாக உள்ளது. தயவுசெய்து, சற்று நேரம் உம்முடைய கரத்தைப் பிடிக்க விரும்புகிறேன். இப்பொழுது, அங்கே ஒரு... அங்கே மிக அதிக கோளாறு இல்லை. இப்பொழுது, சற்று பொறுங்கள். இது கிருமியினால் உண்டான வியாதியாக (germ disease) இல்லாமல் ஏதோவொரு விதமாக உள்ளது. நான் காண வேண்டியதாய் இருக்கும். இப்பொழுது, நீர் அப்படியே என்னை நோக்கிப் பாரும், நான் உம்மிடம் பேசிக் கொண் டிருக்கையில் நீர் அப்படியே எனக்கு மறுஉத்தரவு கொடும். பாரும், ஐயா, அவர்களுடைய... ஐ காணும்படியாக நான் அதை தரிசனத்தின் மூலமாக காண வேண்டும். உம்மைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் கோளாறு ஒரு கிருமியினால் உண்டான வியாதி (germ) அல்ல. உமக்கு புரோஸ்டேட் சுரப்பி கோளாறுக்கான சிறு அறிகுறிகள் உண்டு, அது உமக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட காரணமாகிறது, ஆனால் ஒரு ஜெப அட்டையையோ அல்லது ஏதோவொன்றையோ நீர் பெற்றுக்கொள்ள ஏதுவான விதமாக போதுமான கோளாறு கிடையாது. இப்பொழுது, நீர் அப்படியே இந்தவிதமாக நோக்கிப் பாரும். அப்படியே உத்தமமாக இரும். உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியும். மேலும் இப்பொழுது, நீர் எவ்வளவு காலமாக ஒரு கிறிஸ்தவராக இருந்து வருகிறீர்? ஏறக்குறைய ஐந்து வருடங்களாக. நீர் கர்த்தரை நேசிக்கிறீர், அப்படித்தானே? அவரை உம்முடைய முழு இருதயத்தோடும் சேவிக்கிறீரா? அவர் அற்புதமானவர், இல்லையா? நீர் சற்றே பதட்டமாக இருக்கிறீர். நான் அமைதிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், அப்போதுதான் நீர்... பதட்டமடையாதீர்கள். அப்படியே இந்தவிதமாக நோக்கிப்பார்த்து, இப்பொழுது விசுவாசியும். அந்த பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறதின் நிமித்தமாக நீர் நிச்சயமாகவே மிகவும் வினோதமான உணர்ச்சியைக் கொண்டிருக்கிறீர். ஆம், ஐயா, உமக்கு என்ன கோளாறு இருக்கிறது என்று நான் காண்கிறேன். உமக்கு காக்கை வலிப்பு உண்டு. அது சரியல்லவா? பாருங்கள், உமக்கு அப்படிப்பட்ட மயக்கங்கள் அங்கே உண்டாயிருக்கின்றன என்று காண்கிறேன். அதைக் கூறுவதற்கு இங்கே ஏதோவொன்று இருக்கிறது, இல்லையா? தேவ குமாரனை நீர் விசுவாசிக்கிறீரா? நான் அவரிடம் வேண்டிக் கொள்வேன் என்றால், அது உம்மை விட்டுப் போய், அது இனிமேலும் திரும்பி வராது என்று நீர் விசுவாசிக்கிறீரா? நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா. அந்தச் சிறு பையன் யாருடையவனோ, யாராவது ஒருவர் அங்கேயிருக்கிற அந்தச் சிறு பையனை தூக்கிக் கொள்ளுங்கள். சிலசமயங்களில் இது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் போய் விடுகிறது. மேலும் நான்... அந்தச் சிறு பையனோடு இருக்கிற யாராவது ஒருவர், எங்காவது இருக்கும் தாயாருக்கு பக்கத்தில் அவனை வைத்துக் கொள்ளுங்கள். அவனை அங்கே கொண்டு செல்லுங்கள். ஐயா, அருகில் வாருங்கள். 27. எங்கள் பரலோகப் பிதாவே, துன்பத்தோடிருக்கிற எங்கள் சகோதரன் இங்கே நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு உம்மைத் தவிர எதுவுமே உதவி செய்ய முடியாது என்பதை அறிந்தவனாய், நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்று என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். மகத்தான, பலமுள்ள, அருமையாக தோற்றமளிக்கிற இந்த மனிதர் இவ்விதமாக அப்படிப்பட்ட ஒரு வல்லமையினால் துன்பப்படுகிறார், மருத்துவர்களும் அதனோடு எதையுமே செய்ய முடியவில்லை. ஆனால், கர்த்தாவே, ஒருநாள் காலையில், ஒரு மனிதன் ஒரு பையனை உம்மிடம் கொண்டு வந்தான். அவர்கள் அவனை உம்முடைய சீஷர்களிடம் கொண்டு வந்தார்கள், அவர்களால் அவனுக்கு எதையுமே செய்ய முடியவில்லை. அவனுக்கு வலிப்பு நோயின் காரணமாக வலிப்பு வந்து கொண்டிருந்தது. பிசாசு உம்மைக் கண்ட போது, அந்தப் பையன் தரையில் விழுந்து, வாயில் நுரை தள்ளினான். ஆனால் நீர், 'அவனைத் தூக்குங்கள். அது சரியாகி விட்டது' என்றீர். அநேகமாக அதுதான் அவன் எப்பொழுதாவது கொண்டிருந்த கடைசி வலிப்பாக இருந்தது, நீர் அதை அவனை விட்டுத் துரத்தினீர். அந்தத் தகப்பனார், 'நீர் எனது மகனுக்கு உதவி செய்யக் கூடுமா?' என்று கேட்டார். நீரோ, 'நீ விசுவாசித்தால் என்னால் கூடும், விசுவாசிக் கிறவர்களுக்கு எல்லாம் கூடும்' என்றீர். 28. ஓ அன்பான தேவனே, நீர் இன்றிரவு இந்த மேடையின் மேல் மாம்ச சரீரத்தில் நின்று கொண்டிருந்திருப்பீரானால், நீர் உமது கரங்களை நீட்டும் போது, இம்மனிதன் உம்மை நோக்கிப் பார்ப்பான், அப்போது நீர் இங்கே இருந்தீர் என்று அவன் அறிந்து கொள்வான். அவன் உம்மை விசுவாசிப்பான். ஆனால் இப்பொழுது நீர் இங்கே வேறொரு ரூபத்தில் இருந்து, உமது சபையில் கிரியை செய்து கொண்டிருக்கிறீர். நீர், 'கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, ஆனாலும் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் காலத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன்' என்றீர். இப்பொழுது, அது உம்முடைய இரத்தத்தின் பிரதிநிதியாக உள்ளது. நான் ஒரு சவாலான விசுவாசத்தோடு வருகிறேன். எனவே அன்புள்ள தேவனே, இந்த அசுத்த வல்லமையை இம்மனிதரை விட்டு துரத்த எனக்கு உதவி செய்யும். காக்கை வலிப்பு என்று அழைக்கப்படுகிற பிசாசே, அமைதியாயிரு. ஆனால் கல்வாரியில் மரித்து, தம்முடைய இரத்தத்தை இலவசமாகக் கொடுத்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் மூலமாக, உனக்குக் கட்டளையிடுகிறேன், இந்த மனிதரை விட்டு வெளியே வா, இவரை விட்டுப் போ. அது உம்மை விட்டுப் போய்விட்டது. சற்று குளிர்ச்சியான உணர்வு உம்மேல் பாய்ந்து செல்கிறது. சரி, நீர் உமது தலையை உயர்த்தலாம். இந்த சகோதரன் இங்கே நின்று கொண்டிருக்கிறார், அப்போது அவர் மேல் ஒரு குளிர்ச்சியான உணர்ச்சி பாய்ந்து சென்றதாக அவர் கூறினார். எல்லாமே அவரை விட்டுப் போய் விட்டது. அது அவரிட மிருந்து போய் விட்டது. இப்பொழுது, சமாதானத்தோடே போங்கள்...?... [ஒரு சகோதரன், இந்த சகோதரருடைய அட்டையில் 'காக்காய் வலிப்பு' என்ற வார்த்தை உள்ளது என்று கூறுகிறார்.] சரி, உங்களுடைய அடுத்த நோயாளியை அழைத்து வாருங்கள். 29. இப்பொழுது, ஒவ்வொருவரும் உங்களால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பயபத்தியாக இருங்கள், தேவன் ஆசீர்வதித்து உங்களை சுகப்படுத்துவார். எத்தனை பேர் அவரை நேசிக்கிறீர்கள், ஆமென் என்று கூறுங்கள். [சபையார், 'ஆமென்' என்கின்றனர்.] அவர் அற்புதமானவர். சரி, ஒவ்வொருவரும்...?... உம்முடைய கரத்தை ஒரு நிமிடம் நாங்கள் பார்க்கட்டும். ஓ, அது...?... அந்த...?... அது தட்டிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. என்ன சம்பவித்தது. உங்களுடைய... நீங்கள் இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நான் அவரை வேண்டிக்கொள்வேன் என்றால், அவர்... நான் அவரை வேண்டிக் கொள்வேன் என்று நீர் விசுவாசித் தால், உம்மால் கேட்க முடியுமா? உங்கள் ஜீவியம் முழுவதும் நீங்கள் அவரை சேவித்து, அவருக்குத் துதியை செலுத்து வீர்களா? நான் இதை செய்யும்படிக்கு அவர் என்னை அனுப்பினார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? உமக்கு வேறு தொல்லைகளும் கூட உண்டு, இல்லையா? உமக்கு வேறு வியாதிகளும் உள்ளன, உடல் ரீதியான வியாதிகள். உம்முடைய முதுகு, உமது தோள்களுக்கு இடையில், பலவீனமாக இருப்பதாகத் தோன்றுகிறது. சரி, உம்மைச் சுகமாக்கும்படி நான் அவரிடம் கேட்கையில், நீங்கள் தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருப்பீர்களா? நாம் எல்லாரும் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமா. 30. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த அன்பான பெண்மணி இங்கே மேலே வந்திருக்கிறாள். ஒரு செவிட்டு ஆவி அவளைப் பிடித்திருக்கிறது, இவள் செவிடாயிருக்கிறாள், இவள் இந்தக் காது கேட்கும் கருவியின் மூலமாக மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால், கர்த்தாவே, இவளுடைய சகாயராய் இருப்பவரே, இவளை சிருஷ்டித்தவரே, உம்மால் இவளைச் சுகப்படுத்த முடியும். நீர் இவள் மேல் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுதே இவளுக்கு சுகத்தை அருளும், மேலும் இவளுடைய முதுகிலிருக்கும் இந்தக் கோளாறாகிய, வாதநோய் சார்ந்த இந்த வேதனைகளிலிருந்தும் நீர் இவளுக்கு சுகத்தைக் கொடுத்தருளும். அன்புள்ள பரலோகப் பிதாவே, அங்கேயிருக்கும் அதையும் கூட இவளுக்கு சுகப்படுத்தும். இவளுடைய கண்களும் நரம்புகளும் கூட பலவீனமடைந்து கொண்டே வருகின்றன என்பதைக் காண்கிறேன். அவள் ஒரு-ஒரு வித்தியாசமான நபராக இருக்கும்படி அருளும், அவள் தன்னுடைய ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைச் சேவித்து, சாட்சி கூறி, கிறிஸ்துவைப் பற்றிய இந்த மகிமையான சுவிசேஷத்தை மற்றவர்கள் கொண்டு செல்வதற்கு இவள் காரணமாகும்படியாக வெளியே போவாளாக. இவளுடைய சாட்சி தேவனுடைய மகிமைக்காக ஒரு மகத்தான வழியில் உபயோகப்படுத்தப்படுவதாக. இவளுக்கு எவ்வளவு நாட்கள் மீதமிருக்கிறதோ அவ்வளவு நாட்களும் உம்மை மகிமைப்படுத்தும்படி செலவழிப்பாளாக. உம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று எங்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சாட்சியை அவளுக்கு கொடுக்கும்படியாக அது இவள் மேல் வருவதாக. உம்மால் இவளைச் சுகப்படுத்த முடியும், மற்றவர்களை உமக்கு ஆதாயப்படுத்தும்படியாக, இவள் வெளியே சென்று சாட்சி கூறுவாளாக. இப்பொழுது அவளுக்கு உதவி செய்யும். செவிட்டு பிசாசே, இவளுடைய சரீரத்தைக் கட்டி வைத்திருக்கிற பலவீனப்படுத்துகிற ஆவியே, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விடுதலை செய். இவளை விட்டு வெளியே வா. 31. இப்பொழுது, சற்று நேரம் எல்லாரும் உங்கள் தலையைத் தாழ்த்திய வண்ணமாக இருங்கள். அது கட்ட விழ்க்கப்பட அனுமதிக்கவில்லை. இப்பொழுது, தயவுசெய்து என்னுடைய சத்தத்தை நீங்கள் கேட்பது வரையில், உங்கள் தலையை உயர்த்த வேண்டாம். சிலசமயங்களில், அநேக ஜனங்கள், சிலசமயங்களில் நீங்கள் விசுவாசிப்பதாக எண்ணிக் கொள்கிறீர்கள், அது உங்களுக்குத் தெரியும், அப்போது நீங்கள் சற்றே உங்கள் தலையை உயர்த்தி, அவளைப் பார்த்து, அதைப் பரிசோதிக்கும்படி கவனிக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது, அவ்வாறு செய்யாதீர்கள். அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே...?... இப்பொழுது, நீங்கள் மிக அருமையான தேவ பிள்ளைகளாக இருக்கிறீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். பிதாவே, இப்பொழுது இரக்கமாயிருந்து, எங்கள் சகோதரியை சுகப்படுத்தும், அப்பொழுது அவள் உம்முடைய சீஷியாக இருந்து, தெய்வீக சுகமளித்தலுக்கு சாட்சியாக இருப்பாளாக. செவிட்டு ஆவியே, இந்தப் பெண்ணை விட்டு விலகு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளை விட்டு வெளியே வா. இப்பொழுது, தொடர்ந்து இங்கே உங்கள் தலையைத் தாழ்த்தியவண்ணமாக இருங்கள். அது அவளை விட்டுப் போய் விட்டது. இப்பொழுது சற்று பொறுங்கள்...?... 32. நான் கூறுவது உனக்குக் கேட்கிறதா? நான் கூறுவதை உன்னால் கேட்க முடிகிறதா? ஆமென். அப்படியானால், 'ஆமென்' என்று கூறு. ஆமென். [அந்தச் சகோதரி, 'ஆமென்' என்று கூறுகிறாள்.] அது-அது... அது சரி. இப்பொழுது நான் சொல்வது கேட்கிறதா? [சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார்.] சரி, நீங்கள் உங்கள் தலையை உயர்த்தலாம். அது உன்னை விட்டுப் போய் விட்டது. சரி. [சகோதரன் பிரன்ஹாம் ஒருவிசை தம்முடைய விரலைச் சொடுக்குகிறார்.] அது கேட்கிறதா? [சகோதரன் பிரன்ஹாம் மறுபடியும் தம்முடைய விரலைச் சொடுக்குகிறார்.] என்னைக் கேட்கிறதா? [சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்கி விட்டு, அநேக தடவைகள் கைதட்டுகிறார்.] என்னை கேட்கிறதா? இப்பொழுது, நீ உன்னுடைய காதுகேட்கும் கருவியை கொண்டிருக்கவில்லை. இப்பொழுது, அது குறைவாக உள்ளது, ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில், ஒருக்கால் இரண்டு மணி நேரங்களில், நீ மிக நன்றாகக் கேட்பாய். ஏறக்குறைய நாளைக்கு அடுத்த நாள், நீ மறுபடியும் முற்றிலுமாக செவிடாகிப் போய் விடுவாய். அதன்பிறகு, அதற்கும் ஏறக்குறைய இரண்டு நாட்கள் கழித்து, உன்னுடைய காதிலிருந்து ஒழுகி வெளியே வரத் துவங்கும். பிறகு, திரும்பி வா, அப்போது நீ பரிபூரணமாகவும் நன்றாகவும் கேட்பாய். அங்கே செவிப்பறையில் ஒரு வளர்ச்சி உள்ளது (உனக்குப் புரிகிறதா?) அதுதான் அதைச் செய்து கொண்டிருந்தது. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னுடைய மற்ற கோளாறுகளும் கூட போய் விட்டன. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நாம் ஒவ்வொருவரும், 'கர்த்தருக்கு துதி உண்டாவதாக' என்று கூறுவோம். [சபையார், 'கர்த்தருக்கு துதி' என்று கூறுகிறார்கள்.] நாம் வெறுமனே விசுவாசத்தைக் கொண்டிருப்போம், நம்முடைய முழு இருதயங்களோடும் விசுவாசிப்போம், தேவன் அதை அருளுவார். சரி, உங்களுக்கு விருப்பமானால், அடுத்த மனிதரை அழைத்து வாருங்கள். 33. இப்பொழுது, சம்பவித்த காரியங்கள் அங்கே உள்ளன... உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது, அவளு டைய செவிப்பறையில் ஒரு வளர்ச்சி உண்டாயிருந்தது. நீங்களோ, எதுவுமோ மரிக்கும் போது, அது மரித்த பிறகு உடனடியாக, அது சுருங்குகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். எத்தனை பேருக்கு அது தெரியும்? இங்கே உள்ளே மான் வேட்டைக்காரர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். சரி. நீங்கள் இன்றிரவு அந்த மானைக் கொன்று விட்டு, அதனுடைய எடை எவ்வளவு என்று பையன்களிடம் கூறுங்கள். காலையில் கவனமாயிருங்கள்; அதனுடைய எடையில் நிறைய வித்தியாசம் இருக்கும். அது சரி அல்லவா? ஒரு சிறு மிருகம் இங்கே வீதியில் அடிபட்டு கிடக்கட்டும், அது அப்போது சுருங்கும். இறந்தோரை புதைக்கும் சடங்குகளை செய்பவருக்கு (undertaker) அது தெரியும். அப்போது அவர்கள் அந்த நோயாளியை விட்டு பொய் பற்களை வெளியே எடுத்து விடுவார்கள், ஏனென்றால், அது சுருங்கிய பிறகு, அவைகள் பெரிதாக உப்பிப் போகும் (push out). ஆனால் அது வீங்கின பிறகு... அது சற்று நேரம் சுருங்கின பிறகு, அது உப்பி வீங்கத் தொடங்கும். அதன்பிறகு அது... ஆகத் தொடங்குகிறது. [ஒலிநாடாவில் காலியிடம்.]... ஒரு சிறு நாயினுடைய சரீரத்தைப் போன்று. ஆகையால் தான் இப்பொழுது ஏறக்குறைய...க்குள் அவள் முற்றிலுமாக செவிடாகிப் போவாள் என்று அவளிடம் கூறினேன். ஏறக்குறைய 72 மணி நேரம் கழித்து, அது சுருங்கத் தொடங்கும், அப்போது அவள் நன்றாகக் கேட் கிறவளாக இருப்பாள். இப்பொழுது அவளால் கேட்க முடிகிறது. முதலில், ஒரு காரியத்தையும் கேட்க முடியாதிருந்தது. இப்பொழுது, அவளால் இயல்பாக கேட்க முடிகிறது, ஏறக்குறைய இயல்பான கேட்கும் திறன் தான். ஏனென்றால் ஜீவன் வெளியே போன உடனே, அது இயல்பான நிலையிலிருந்து கீழே போகிறது. இப்பொழுது, அவள் விசுவாசிகளின் மத்தியில் வருவாளானால், அப்போது... அதற்குள் அழிவு தொடங்கின பிறகு, அது அவளுடைய காதுகளிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் என்று நான் அவளிடம் கூறினேன். இப்பொழுதிலிருந்து ஏறக்குறைய 4 அல்லது 5 இரவுகளில் அவளுடைய சாட்சியைக் கவனித்துப் பாருங்கள். என்ன சம்பவித்தது என்று பாருங்கள். இப்பொழுது, அப்படியே விசுவாசம் கொண்டிருங்கள், விசுவாசியுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம்.] 34. இங்கே... பற்றிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கி றீர்கள். தேவன் என்னிடம் பேசும்படி நீர் கேட்டுக்கொண்டிருக்கிறீர். அது சரி அல்லவா? இப்பொழுது, இந்தவிதமாகப் பாருங்கள். சற்று முன்பு ஒரு தரிசனம் உமக்கு மேலாக அசைந்து கொண்டிருப்பதை நான் கண்டேன். நீங்கள்-நீங்கள் இங்கிருந்து தூரத்திலிருந்து வருகிறீர்கள். அது சரி அல்லவா? நீங்கள் இங்கே இந்தப் பட்டணத்திற்கு அந்நியராயிருக்கிறீர், அதிகமாக சமபூமியிருக்கும் ஒரு இடத்திலிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். நிறைய காற்று அடிக்கிறது, டெக்ஸôஸ், கான்ஸôஸ் போன்ற ஏதோவொரு இடத்திலிருந்து வருகிறீர்கள், அது டெகோடாஸ் (Dakotas) அல்லது அங்கே அதனூடாக ஏதோவொரு இடத்திலிருந்து வருகிறீர்கள். அது சமபூமியான தேசம், அங்கு தான் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் பார்க் கட்டும். பாருங்கள். இதைக் கவனியுங்கள். ஓ, உமக்கிருக்கும் கோளாறு உமது வாயில் உள்ளது. உம்முடைய வாயில் புற்றுநோய் உள்ளது என்று நம்புகிறேன். அது சரி அல்லவா? அது சரியே. தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து உம்மைச் சுகமாக்குகிறார், ஐயா. போங்கள், தேவனாகிய கர்த்தர்...?... நாம் அவருக்கு துதியைச் செலுத்துவோம். ஓ, அவர் இங்கேயிருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசிக்கவில்லையா? அவர் இங்கே இருக்கையில், இப்பொழுது எத்தனை பேர் அவரை விசுவாசிக்கிறீர்கள்? நாம் எழுந்து நின்று அவருக்கு துதியைச் செலுத்துவோம். [ஒலிநாடாவில் காலியிடம்.] பரிசுத்த ஆவியானவரே, அவர்கள் மேல் அசைவாடி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்.